முல்லைப் பெரியாறு அணை உறுதி; சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்
முல்லைப் பெரியாறு அணை உறுதி; சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்
ADDED : ஜன 28, 2025 01:00 PM

புதுடில்லி: 'முல்லைப் பெரியாறு அணை உறுதியாக உள்ளது. மக்கள் அச்சத்தில் உள்ளதாக கூறுவது காமிக் கதைகளை போல் உள்ளது' என சுப்ரீம் கோர்ட் தெரிவித்து உள்ளது.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரளாவை சேர்ந்த ஜோ ஜோசப் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று (ஜன.,28) விசாரித்த, சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரிஷிகேஷ் ராய் கூறியதாவது: முல்லைப்பெரியாறு அணை உறுதியாக உள்ளது. 130 ஆண்டுகளுக்கு மேல் ஆன அணை எத்தனையோ பருவ மழையை கண்டு இன்னும் நிலையாக உள்ளது. அணை உடைந்துவிடும் என்று மக்கள் அச்சத்தில் உள்ளதாக கூறுகின்றனர்.
மக்கள் அச்சத்தில் உள்ளதாக கூறுவது காமிக் கதைகள் போல் இருக்கிறது. நானும் கேரளாவில் வசித்தேன். நமது வயதை விட இரு மடங்கு வயதிலுமக முல்லைப் பெரியாறு அணை உறுதியாக உள்ளது. பல பருவமழையை கண்டு நிலைத்துள்ள அணையை கட்டிய பொறியாளர்களுக்கு நன்றி கூற வேண்டும். இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.