நீதிபதியின் செல்போன் திருட்டு; வான்கடே மைதானத்தில் கைவரிசை
நீதிபதியின் செல்போன் திருட்டு; வான்கடே மைதானத்தில் கைவரிசை
ADDED : ஏப் 21, 2025 11:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை: மும்பை - ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான பிரீமியர் லீக் போட்டியை மைதானத்திற்கு பார்க்கச் சென்ற மும்பை மாவட்ட நீதிபதியின் செல்போன் திருடப்பட்டது.
பிரீமியர் கிரிக்கெட் தொடரின் 50 சதவீத போட்டிகள் நிறைவடைந்தன. கடந்த 17ம் தேதி மும்பை - ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியைக் காண தெற்கு மும்பை மாவட்ட நீதிபதி ஒருவர், வான்கடே மைதானத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அவருடைய ஐபோன் 14 மாடல் செல்போனை மர்ம நபர் திருடியுள்ளனர்.
இது குறித்து அவர் ஆன்லைன் மூலமாக புகார் அளித்துள்ளார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், இது பற்றி விசாரித்து வருகின்றனர்.