ADDED : ஜன 27, 2025 06:16 PM

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 824 புள்ளிகளும், நிப்டி 263 புள்ளிகளும் சரிந்தன.
மும்பை பங்குச்சந்தை இன்று தொடக்கம் முதலே சரிவில் இருந்தது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் எண்ணெய், காஸ் நிறுவன பங்குகள் அதிகம் விற்பனைக்கு வந்தன.
இன்றைய வர்த்தகம் நேரம் முடிவில் பங்குச்சந்தை 824 புள்ளிகள் சரிந்து, 75,366 புள்ளிகளாக நிலை பெற்றது. நிப்டி 263 புள்ளிகள் சரிந்து 22,829 புள்ளிகளாக நிலை பெற்றது.
எச்.சி.எல்., 4.49 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. ஜொமோட்டோ, டெக் மகேந்திரா, பவர் கிரிட், டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள் அதிக வீழ்ச்சியை சந்தித்தன.
இன்போசிஸ், டாடா ஸ்டீல், எச்.டி.எப்.சி., ரிலையன்ஸ், பாரதி ஏர்டெல் ஆகியவற்றின் பங்குகளும் சரிந்தன. இதன் விளைவு, 7 மாதங்களில் இல்லாத வீழ்ச்சியை மும்பை பங்குச்சந்தை இன்று கண்டது.
அமெரிக்க வர்த்தகக் கொள்கை மீதான நிச்சயமற்ற தன்மையால் முதலீட்டாளர்களின் போக்கு பாதிக்கப்பட்டது. ஐடி, தொலைத்தொடர்பு, பயன்பாடுகள், மின்சாரம், நுகர்வோர் சாதனங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் சுகாதாரத் துறை பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன.

