தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/மாநகராட்சி பட்ஜெட் - 1

மாநகராட்சி பட்ஜெட் - 1

மாநகராட்சி பட்ஜெட் - 1


ADDED : பிப் 29, 2024 11:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 29, 2024 11:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சொத்து வரி மீதான வட்டி தள்ளுபடி

l மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 20 லட்சம் சொத்துகளின் பத்திரங்கள் ஸ்கேனிங் செய்யப்படுகின்றன. விரைவில் இ - பட்டா வழங்கப்படும்

l சொத்து ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்குவதால், எந்த சொத்தையும் யாரும் முறைகேடாக திருத்த முடியாது. வருவாய் பிரிவின் கீழ் சர்வே பணிகள் கொண்டு வரப்படும்

l நீண்ட ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு, ஒருமுறை செட்டில்மென்ட் செய்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31 வரையிலான முழு வட்டி தள்ளுபடி செய்யப்படும். அபராத தொகை 100 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

இதனால், 15 லட்சம் பேர் பயனடைவர். மொத்தம் 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான வட்டி, அபராதம் குறைக்க வழி வகுக்கும். நேர்மையான முறையில் வரி செலுத்துவோருக்கு வருங்காலத்தில் சலுகைகள் அளிக்கப்படும்

l சொத்து அடிப்படையில், 6 கட்டங்களாக பிரிக்கப்பட்டு வரி வசூலிக்கும் முறை, ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படும்

l ட்ரோன் மூலம், 163 வார்டுகளில் சொத்துகள் கணக்கெடுப்பு செய்து வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளன.

500 கோடி ரூபாய்

வருவாய் எதிர்பார்ப்பு

l மாநகராட்சி சார்பில், புதிய விளம்பர கொள்கை உருவாக்கப்படும். புதுடில்லி மாநகராட்சிக்கு, உச்சநீதிமன்றம் அளித்தது போன்று விளம்பரக் கொள்கை உருவாக்கப்படும். நகரின் அழகை மேம்படுத்தும் வகையில் விதிகள் இருக்கும்

l விளம்பரம் மூலம் ஓராண்டில் 500 கோடி ரூபாய் வருவாய் எதிர்பார்க்கப்படுகிறது

l விளம்பரங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் தொழில்நுட்பம் மூலம் பாரபட்சமற்ற முறை அமல்படுத்தப்படும்

l விளம்பரத்துக்கு ஆன்லைனிலேயே விண்ணப்பித்து, அதற்கான தொகையும் செலுத்தும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும்.

புதிய சொத்து ஒப்பந்த கொள்கை

l மாநகராட்சி சொத்துக்களை ஒப்பந்தத்துக்கு வழங்கும் நிர்வகிக்கும் வகையில், புதிய சொத்து ஒப்பந்தக் கொள்கை உருவாக்கப்படுகிறது

l வாடகை, ஒப்பந்தம் வழங்குவதில் நேர்மையான செயல்முறை நடைமுறைப்படுத்தப்படும். இதன் மூலம், சொத்துகளை பாதுகாத்து மாநகராட்சிக்கு வருவாய் ஈட்ட முடியும்.

வருவாய்:

விளம்பரம்:

சொத்து, மார்க்கெட்:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us