தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/இசையமைப்பாளர் தேவா காலமானார்; முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி

இசையமைப்பாளர் தேவா காலமானார்; முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி

இசையமைப்பாளர் தேவா காலமானார்; முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி

39


UPDATED : அக் 17, 2026 04:48 PM

ADDED : அக் 17, 2026 11:24 AM

Follow on GoogleFavourite on Google

39

UPDATED : அக் 17, 2026 04:48 PM ADDED : அக் 17, 2026 11:24 AM


39
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் தேவா. மனசுக்கேத்த மகராசா என்ற படத்தின் மூலம் 1989ம் ஆண்டு இசையமைப்பாளர் அறிமுகமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட 450 படங்களுக்கு இசையமைத்துள்ளார். ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்டோருக்கு பல வெற்றிப் பாடல்களை கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கானா பாடல்களை அறிமுகப்படுத்தியவர் தேவா. தன்னுடைய குரல் மற்றும் இசையினால் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர். கடந்த சில தினங்களாக வயோதிகம் மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தேவா, சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று திடீரென அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். சொந்த ஊரில் நாளை (அக்,18) இறுதிச்சடங்குகள் நடக்கின்றன. அவரின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இசை அமைப்பாளர் தேவா உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இரங்கல்

தேனிசைத் தென்றல் தேவாவின் இசைப் பயணமும், பாடல்களும் திரையிசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்; அவரை இழந்துவாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் விஜய்

இசையமைப்பாளர் தேவாவின் மறைவு, தமிழ் திரையுலகிற்கும் இசை உலகிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் - கவர்னர் அர்லேக்கர்

நாயகர்களுக்கான மாஸ் பாடல்கள் மட்டுமின்றி, மனதை வருடும் மெல்லிசைப் பாடல்களிலும் தேவாவுக்கு நிகர் தேவாதான் - திமுக தலைவர் ஸ்டாலின்

சொந்த ஊரில் இறுதிச்சடங்கு

செய்தியாளர்களிடம் பேசிய தேவாவின் மகனும், இசையமைப்பாளருமான ஸ்ரீகாந்த் தேவா, ‛‛என்னால் பேச முடியவில்லை. திடீரென அப்பா எங்களை விட்டு போய்விட்டார். அப்பாவிற்கு கார்டியாக் அரஸ்ட். மருத்துவமனையில் சிகிச்சை அளித்தோம். இருந்தாலும் அவரை காப்பாற்ற முடியவில்லை. அப்பாவிற்கு அரசு மரியாதை உடன் இறுதிச்சடங்கு நடக்கும் என அறிவித்துள்ளனர். அதற்காக என் குடும்பத்தினர் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அப்பாவின் சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள சக்கரமல்லூரில் இறுதிச்சடங்கு நடக்கிறது. நாளை(அக்., 18) ஒரு மணிக்கு சென்னை திநகர் வீட்டிலிருந்து அவர் உடல் சொந்த ஊரான ஆற்காடு புறப்படுகிறது. மாலை அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடக்கிறது'' என்றார்.

Image 1632091

Image 1632092

இசையமைப்பாளர் தேவா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி:

தேனிசைத்தென்றல் என்று அன்புடன் அழைக்கப்பட்டு வந்த தேவா, உடல்நிலை பாதிக்கப்பட்டு இன்று காலமானார். அவரின் உடலுக்கு குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகத்தினர் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

நீலாங்கரை இல்லத்தில் இருந்து புறப்பட்ட முதல்வர் விஜய், தி நகரில் உள்ள பத்மநாபன் தெருவில் அமைந்திருக்கும் தேவாவின் வீட்டுக்கு நேரில் சென்றார். அங்கு அவரது உடலுக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னர், தேவா மகன் ஸ்ரீகாந்த் தேவாவை ஆரத்தழுவி ஆறுதல் கூறி தேற்றினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us