ADDED : மார் 19, 2024 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேர்தல் பத்திரம் தொடர்பாக நேற்று நடந்த விசாரணையின்போது, ''இந்த தீர்ப்பு குறித்து, பலர் பேட்டி அளித்து வருகின்றனர்.
''அது நீதிமன்றத்தை விமர்சிக்கும் வகையிலும் உள்ளது. அதுபோல, சமூக வலைதளங்களில் கிண்டல், கேலி செய்தும் பதிவிடுகின்றனர்,''என, சொலிசிட்டார் ஜெனரல் துஷார் மேத்தா குறிப்பிட்டார்.
இதற்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியதாவது:
அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டே நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. நாட்டின் சட்டத்தை மதித்தே, விசாரணைகள் நடக்கின்றன. நாம் ஒரு தீர்ப்பு அளித்த பின், அது நாட்டின் சொத்தாகி விடுகிறது. அதனால், இதன் மீதான விவாதமும் திறந்து விடப்படுகிறது.
இதுபோன்ற விமர்சனங்களை தாங்கும் அளவுக்கு, நம் தோள்கள் வலிமையாக உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

