வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு; அதிக மழைப்பொழிவு எங்கே!
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு; அதிக மழைப்பொழிவு எங்கே!
UPDATED : நவ 18, 2025 10:10 AM
ADDED : நவ 18, 2025 07:25 AM

சென்னை: கனமழை காரணமாக, கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.,18) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
வங்கக்கடலில் ஏற்கனவே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி, 22ம் தேதி உருவாக உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தேனி மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
காற்றழுத்த தாழ்வு காரணமாக, கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு மட்டும் (நவ.,18) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் இன்று (நவ.,18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், இன்று காலை 8:30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:
வேதாரண்யம்- 164
ஊத்து- 136
நாலு முக்கு- 128
கோடியக்கரை- 126
திருக்குவளை- 118
கக்கச்சி- 118
நாகப்பட்டினம்- 106
வேளாங்கண்ணி -106
தலைஞாயிறு- 95
திருப்பூண்டி- 91
மாஞ்சோலை- 91
திருத்துறைப்பூண்டி- 86
அபிராம பட்டினம்- 76
சீர்காழி- 75
முத்துப்பேட்டை- 73
ஆனைக்காரன் சத்திரம்- 65
செம்பனார்கோவில்- 65
திருவாரூர் -64
குடவாசல்- 61
அண்ணாமலை நகர்- 60
மயிலாடுதுறை- 59
நன்னிலம்- 57
நீடாமங்கலம்- 55
பட்டுக்கோட்டை- 52
மஞ்சளாறு- 50
மதுக்கூர்- 48
சிதம்பரம்- 47
பரங்கிப்பேட்டை- 43
ஒத்திவைப்பு
கனமழை காரணமாக புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இன்று நடக்கவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

