/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மனைவியை குத்தி கொன்ற கணவனுக்கு வலைவீச்சு
/
மனைவியை குத்தி கொன்ற கணவனுக்கு வலைவீச்சு
ADDED : நவ 18, 2025 07:25 AM
அரூர்: மனைவியை கத்தியால் குத்தி கொன்று, தப்பியோடிய கணவனை போலீசார் தேடுகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கோதியழகனுாரை சேர்ந்தவர் வெங்கடேஷ், 33. இவரது மனைவி மகா, 29. இருவருக்கும், நிதிஷ், 8, சாய்ஸ்ரீ, 5, என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
குடும்ப தகராறில், நான்கு மாதங்களுக்கு முன் கோபித்துக்கொண்டு, மகா குழந்தைகளுடன் அரூரிலுள்ள தாய் பூங்கொடி வீட்டிற்கு வந்துள்ளார்.
வெங்கடேஷ், நவ., 15ல் மாமியார் வீட்டிற்கு வந்து, மனைவி, குழந்தைகளை அழைத்து கொண்டு, திருச்செந்துார் கோவிலுக்கு சென்று விட்டு, நேற்று அரூர் திரும்பினார். தொடர்ந்து, தன்னுடன் ஊருக்கு வர, மனைவியை அழைத்துள்ளார்.
இதில், இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த வெங்கடேஷ், மகாவை கத்தியால் குத்தி கொலை செய்தார். பின், குழந்தைகள் இருவரையும் அழைத்து கொண்டு, வெங்கடேஷ் அங்கிருந்து தப்பினார். அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

