/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வீட்டில் வெடிபொருள் பதுக்கிய 2 பேர் சிக்கினர்
/
வீட்டில் வெடிபொருள் பதுக்கிய 2 பேர் சிக்கினர்
ADDED : நவ 18, 2025 07:19 AM
கிருஷ்ணகிரி: வீட்டில், பாறைகளை தகர்க்க பயன்படும் வெடி பொருட்கள் பதுக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி அருகே செம்படமுத்துாரில், சிலர் பாறைகள் உடைப்பதற்கும், கிணறு தோண்டும் பணிகளுக்கும், சட்டவிரோதமாக வெடி பொருட்களை விற்பதாக கிருஷ்ணகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார், மாதேப்பட்டியை சேர்ந்த ராஜேஷ், 45, ஏரிக்கொல்லையை சேர்ந்த திருப்பதி, 53, ஆகியோரின் வீடு, மாட்டுப்பண்ணையில் சோதனை நடத்தினர். இதில், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட குப்பிகள், 120க்கும் மேற்பட்ட டெட்டனேட்டர் குச்சிகள், கரித்துாள் பவுடர், ஒயர், என, 60 கிலோ வெடிப்பொருட்கள் இருந்தது.
இருவரும் பாரூரை சேர்ந்த பன்னீர், 55, என்பவருக்கு சொந்தமான சாணிப்பட்டி, கிடங்கில் இருந்து, வெடிபொருட்களை எடுத்து வந்தது தெரிந்தது.
ராஜேசுக்கு சொந்தமான டிராக்டரில் சென்று, வெடி பொருட்களை விற்று வந்துள்ளனர்.
இதையடுத்து, ராஜேஷ், திருப்பதியை கைது செய்த போலீசார், பன்னீரை தேடுகின்றனர்.

