/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புதியதாக அமைத்த வேகத்தடை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
புதியதாக அமைத்த வேகத்தடை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
புதியதாக அமைத்த வேகத்தடை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
புதியதாக அமைத்த வேகத்தடை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : நவ 18, 2025 01:37 AM
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியிலிருந்து, காரிமங்கலம் செல்லும் சாலையில், போச்சம்பள்ளியிலிருந்து செல்லம்பட்டி வரை, ஏற்கனவே இருந்த தார்ச்சாலை மீது, புதியதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இச்சாலையில் பெரியகரடியூரில், அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் பஞ்., அலுவலகம் உள்ள பகுதியில், புதியதாக கடந்த ஒரு வாரத்திற்கு முன் வேகத்தடை அமைக்கப்பட்டது. வேகத்தடை இருப்பது தெரியாமல், அச்சாலையில், 20, 30 ஆண்டுகளுக்கு மேலாக, சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் வேகத்தடையை கடக்கும்போது, தவறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.
இப்பகுதியில் வேகத்தடை உள்ளது என, அறிவிப்பு பலகை அல்லது பேரிகார்டு அமைத்து, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெடுஞ்சாலை துறை அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.