/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
உலக மாற்றுத்திறனாளிகள் தினம் 21ல் மாவட்ட ஓவிய போட்டி
/
உலக மாற்றுத்திறனாளிகள் தினம் 21ல் மாவட்ட ஓவிய போட்டி
உலக மாற்றுத்திறனாளிகள் தினம் 21ல் மாவட்ட ஓவிய போட்டி
உலக மாற்றுத்திறனாளிகள் தினம் 21ல் மாவட்ட ஓவிய போட்டி
ADDED : நவ 18, 2025 01:37 AM
கிருஷ்ணகிரி,ஒவ்வொரு ஆண்டும் டிச., 3ல் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பார்வை குறைபாடு உடையோர், செவித்திறன் குறைபாடு உடையோர், புற உலக சிந்தனையற்றோர், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, மாவட்ட அளவிலான ஓவிய போட்டிகள் வரும், 21ல் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.
மேலும், வயது அடிப்படையில், 10 வயதிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகள் க்ரையான் மற்றும் வண்ண பென்சில் பயன்படுத்தியும், 11 முதல், 18 வயது வரை, வாட்டர் கலர் பயன்படுத்தியும், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள், எந்த பொருள் வேண்டுமானாலும் பயன்படுத்தி, தங்கள் விருப்பப்பட்ட தலைப்பில் ஓவியம் வரையலாம். இதற்கான கால அவகாசம், 2 மணி நேரத்திற்குள் ஒவியம் வரைய வேண்டும்.
இப்போட்டியில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகள் மாவட்ட கலெக்டர் அலுவலக தரை தளத்தில் அறை எண், 23ல் இயங்கி வரும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் தங்கள் விபரத்தை நாளைக்குள் (புதன்கிழமை) பதிவு செய்ய வேண்டும்.
மேலும் ஓவியப்போட்டியில் முதல், 3 இடங்களை பிடிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில ஆணையரகம் மூலம் பரிசுத்தொகையாக முதல் பரிசு, 1,000 ரூபாய், 2ம் பரிசு, 500 ரூபாய், 3ம் பரிசு, 250 ரூபாய் வழங்கப்பட உள்ளது என, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

