/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை மேம்பால வலதுபுறம் சர்வீஸ் சாலைக்கு கோரிக்கை
/
கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை மேம்பால வலதுபுறம் சர்வீஸ் சாலைக்கு கோரிக்கை
கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை மேம்பால வலதுபுறம் சர்வீஸ் சாலைக்கு கோரிக்கை
கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை மேம்பால வலதுபுறம் சர்வீஸ் சாலைக்கு கோரிக்கை
ADDED : நவ 18, 2025 01:55 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில், ராயக்கோட்டை மேம்பாலத்தின் வலது பக்கம், சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரியை சுற்றிலும், 5 முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் செல்கின்றன. குறிப்பாக, சேலம், பெங்களூரு மற்றும் சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள் எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும். இந்நிலையில், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை மற்றும் சென்னையில் இருந்து வரும் பஸ்கள், கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலத்தின் வழியாக புதிய பஸ் ஸ்டாண்டிற்குள் செல்கிறது. அதேபோல், நகரில் இருந்து கட்டிகானப்பள்ளி, கீழ்புதுார் மற்றும் மங்கை நகருக்கு செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், ராயக்கோட்டை மேம்பாலம் வழியாக சர்வீஸ் சாலை இல்லாததால், எதிர்திசையில் செல்கின்றன. இதனால், தினமும் விபத்து ஏற்பட்டு வருகின்றது.
ராயக்கோட்டை மேம்பாலத்தின் இடது பக்கம் சர்வீஸ் சாலை அமைத்துள்ள நிலையில், வலது பக்கம் அவதானப்பட்டியில் இருந்து கரீம்சாயபு ஏரி வரை சர்வீஸ் சாலை உள்ளது. நகரின் முக்கிய சாலையாக உள்ள ராயக்கோட்டை மேம்பாலத்தின் வலது பக்கம், 100 மீட்டருக்கு சர்வீஸ் சாலை இல்லை. இதனால் வாகனங்கள் எதிர் திசையில் சென்று வருவதால், தினமும் விபத்துக்கள் நடக்கிறது. எனவே, கரீம் சாயபு ஏரியில் இருந்து, ராயக்கோட்டை மேம்பாலம் வரை, உடனே சர்வீஸ் சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

