/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.1.5 லட்சம் கடனுக்கு, ரூ.6.6 லட்சம் செலுத்தியும் பணம் கேட்டு தொந்தரவு என எஸ்.பி., ஆபீசில் புகார்

ADDED : நவ 18, 2025 01:54 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில், 1.5 லட்சம் ரூபாய் கடனுக்கு, 6.6 லட்சம் ரூபாய் கட்டியும், பணம் கேட்டு தொந்தரவு செய்வோர் மீது நடவடிக்கை கோரி, பெண் துாய்மை பணியாளர் சுசீலா, 42, அவரது மகன் மணி, 25, ஆகியோர், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அதில், சுசீலா தெரிவித்திருப்பதாவது:
நான் காவேரிபட்டணம், சுபாஸ் சந்திரபோஸ் தெருவில் என், 4 பிள்ளைகளுடன் வசிக்கிறேன். கடந்த, 20 ஆண்டுகளுக்கும் மேல் காவேரிப்பட்டணம் டவுன் பஞ்.,ல் தற்காலிக துாய்மை பணியாளராக பணியாற்றி வருகிறேன். என் மகன் மணியும் கடந்த, 2 ஆண்டுகளாக துாய்மை பணியாளராக பணியாற்றுகிறார்.
கடந்த, 2012ல், என் கணவர், என்னை விட்டு பிரிந்து சென்ற பின், காவேரிப்பட்டணம் அப்பாசாமி தெருவை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் இதயவேந்தன், சுமதி ஆகியோரின்
வீட்டில் வேலையும் செய்து வந்தேன். அப்போது அவர்களிடம், 4 தவணையாக, 1.50 லட்சம் ரூபாய் கடன் பெற்றேன். அதற்கு அவர்கள் வீட்டில், 12 ஆண்டுகள் பணி செய்ததுடன், மாதம், 5,000 ரூபாய் கட்டி வந்தேன். அதன்படி, 1.50 லட்சம் ரூபாய் கடனுக்கு, 6.60 லட்சம் ரூபாய்
கட்டியுள்ளேன். கடந்த ஓராண்டாக, என்னால் பணம் கட்ட முடியவில்லை. அவர்கள் வீட்டிற்கு வேலைக்கும் செல்லவில்லை. இதனால் அவர்கள், என் வீட்டிற்கு வந்து என்னை மிரட்டுவதும், என்னை பணி செய்ய விடாமலும் தொல்லை கொடுக்கின்றனர். மேலும், 1.50 லட்சம் ரூபாய் கடனை கொடு எனக்கேட்டு மிரட்டுகின்றனர். இது குறித்து
விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
எஸ்.பி., அலுவலகத்தில் மனுவை பெற்றுக்கொண்ட போலீசார், இது குறித்து கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., முரளி தலைமையில் விசாரிக்கப்படும் எனக்கூறி அனுப்பி
வைத்தனர்.