/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., ஆபீசில் மேற்கு மண்டல ஐ.ஜி., ஆய்வு
/
கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., ஆபீசில் மேற்கு மண்டல ஐ.ஜி., ஆய்வு
கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., ஆபீசில் மேற்கு மண்டல ஐ.ஜி., ஆய்வு
கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., ஆபீசில் மேற்கு மண்டல ஐ.ஜி., ஆய்வு
ADDED : நவ 18, 2025 01:53 AM
கிருஷ்ணகிரி, கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., செந்தில்குமார் நேற்று மாலை, கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., அலுவலகத்தில் ஆய்வு செய்தார். கிருஷ்ணகிரி உட்கோட்டத்திற்கு உட்பட்ட கிருஷ்ணகிரி டவுன், தாலுகா, கே.ஆர்.பி., டேம், காவேரிப்பட்டணம், குருபரப்பள்ளி, வேப்பனஹள்ளி, மகாராஜகடை ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் பதிவாகி உள்ள வழக்குகள் விபரம், மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டார் .
தொடர்ந்து போலீசாரிடம் குறைகளை கேட்ட ஐ.ஜி., செந்தில்குமார், போலீசார், உடல்நலத்தை பேணி காக்க வேண்டும். பலருக்கு ரத்த அழுத்த பிரச்னை உள்ளது. எனவே, முறையாக உடலை கவனித்துக் கொள்ள அறிவுறுத்தினார்.கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., தங்கத்துரை , டி.எஸ்.பி., முரளி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.