ரூ.1.17 கோடி மதிப்பு தங்கம் கடத்தல்: டில்லியில் மியான்மர் பெண் கைது
ரூ.1.17 கோடி மதிப்பு தங்கம் கடத்தல்: டில்லியில் மியான்மர் பெண் கைது
ADDED : அக் 25, 2025 09:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ரூ.1.17 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்திய மியான்மரைச் சேர்ந்த பெண் ஒருவர் டில்லி விமான நிலையத்தில் கைதானார்.
டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு மியான்மரின் யாங்கூனிலிருந்து வந்த விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.
இதனையடுத்து அதிகாரிகள் அவரை நிறுத்தி அவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் 996.5 கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1.17 கோடி ஆகும். அந்த பெண் கைது செய்யப்பட்டார்.

