ADDED : ஜன 30, 2024 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவனந்தபுரம்: சென்னை சிட்லபாக்கத்தைச் சேர்ந்த கருணா நிதி, 72 பேர் அடங்கிய குழுவினருடன் ஜன., 10ல் சபரிமலை சென்றார். தரிசனம் முடித்து அனைவரும் ஜன., 12-ல் புறப்பட்ட போது நிலக்கல்லில் கருணாநிதி மாயமானார்.
உடன் வந்த பக்தர்கள் நீண்ட நேரம் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவருக்கு லேசான ஞாபக மறதி இருந்ததாக கூறி, பம்பை போலீஸ் ஸ்டேஷனில் அவர்கள் புகார் அளித்து ஊர் திரும்பினர்.
ஜன., 20ல் ஒருவர் கொல்லம் ரயில்வே ஸ்டேஷனில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விசாரணையில், அவர் சபரிமலையில் மாயமான கருணாநிதி என, தெரியவந்தது. உடல் நலம் சரியானதையடுத்து, ரான்னி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கருணாநிதியை, உறவினர்களுடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.