மத்திய அரசு வங்கியில் 108 காலியிடங்கள்: பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு
மத்திய அரசு வங்கியில் 108 காலியிடங்கள்: பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு
ADDED : செப் 30, 2024 07:21 AM

புதுடில்லி: 'நபார்டு' எனப்படும், தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் அலுவலக உதவியாளர் பதவிக்கு 108 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 21.
பொதுத்துறை நிறுவனமான தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி (நபார்டு) வங்கியில், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அலுவலக உதவியாளர்- 108.
கல்வித் தகுதி என்ன?
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு
விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PwBD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்வது எப்படி?
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
வரும் அக்டோபர் 2ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 21.
விண்ணப்பிப்பது எப்படி?
https://www.nabard.org/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

