ADDED : செப் 21, 2024 06:46 AM
பெங்களூரு: நாகமங்களா கலவரம் தொடர்பாக, பணியில் அலட்சியமாக செயல்பட்ட டி.எஸ்.பி., சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மாண்டியா மாவட்டம், நாகமங்களாவில் கடந்த 11ம் தேதி, விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது கலவரம் வெடித்தது. இதுதொடர்பாக, 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து பணியில் அலட்சியமாக இருந்ததாக, நாகமங்களா டவுன் இன்ஸ்பெக்டர் அசோக் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் கலவரம் நடந்ததும் சம்பவ இடத்திற்கு தாமதமாக வந்து, பணியில் அலட்சியம் காட்டியதாக நாகமங்களா டி.எஸ்.பி., சுமித் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. இது பற்றி நடத்தப்பட்ட விசாரணையில், அவர் மீதான குற்றச்சாட்டு உண்மை என தெரிந்தது.
இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து, மாண்டியா எஸ்.பி., மல்லிகார்ஜுன் பாலதண்டி உத்தரவிட்டுள்ளார்.