கத்தி, நகம் வெட்டி, சாவி வளையம்...! 22 வயது இளைஞனின் சாப்பாடு...! டாக்டர்கள் ஷாக்
கத்தி, நகம் வெட்டி, சாவி வளையம்...! 22 வயது இளைஞனின் சாப்பாடு...! டாக்டர்கள் ஷாக்
ADDED : ஆக 26, 2024 01:19 PM

பாட்னா; பீகார் மாநிலத்தில் 22 வயது இளைஞனின் வயிற்றில் இருந்து கத்தி, நகம் வெட்டி உள்ளிட்ட பொருட்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உள்ளனர்.
வயிற்று வலி
கிழக்கு சம்ப்ரான் மாவட்டத்தில் உள்ள மோதிஹரி தனியார் மருத்துவமனையில் இளைஞர் யாஷ்(22) என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்படுவதாகவும், உடனடி சிகிச்சை அளிக்குமாறும் அவரது பெற்றோர் தெரிவித்தனர்.அறுவை சிகிச்சை
இளைஞர் யாஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் ஏதோ வித்தியாசமான பொருட்கள் இருப்பதை கண்டனர். உடனடியாக இளைஞருக்கு அறுவை சிகிச்சை அவசியம் என்று கூறி அதற்கான ஏற்பாடுகளை செய்தனர். அறுவை சிகிச்சைக்கான வேலைகள் ஆரம்பமாகின.கத்தி, சாவி
அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் இளைஞனின் வயிற்றில் இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ந்தே போய்விட்டனர். கொத்துச்சாவி, கத்தி, நகம் வெட்டி, சாவி வளையம் உள்ளிட்ட பல உலோக பொருட்கள் அவரது வயிற்றில் இருந்துள்ளன. அதைத்தான் மருத்துவர்கள் குழு அகற்றி உள்ளது.மனநல பாதிப்பு
இதுகுறித்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் அமித்குமார் என்பவர் கூறியதாவது; அறுவை சிகிச்சைக்குப் பின் இளைஞர் நல்ல உடல்நலத்துடன் உள்ளார், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது போல தெரிகிறது. பசி எடுக்கும் சமயத்தில் எல்லாம் உலோக பொருட்களை சாப்பிட்டு இருக்கிறார். கண்காணிப்பு
அவரது வயிற்றில் இருந்து கொத்து சாவிகள், 4 இஞ்ச் நீளம் கொண்ட கத்தி, 2 நகம்வெட்டி உள்ளிட்டவை அகற்றப்பட்டு உள்ளன. தொடர்ந்து அவரை கண்காணிப்பில் வைத்து இருக்கிறோம். விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படுவார். ஆன்லைன் விளையாட்டு
செல்போன், ரீல்ஸ் வீடியோ, ஆன்லைன் விளையாட்டுகளில் இளைஞர் அதிகம் ஆர்வம் கொண்டவர் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது மனநலம் பாதிக்கப்பட இதுவே காரணமாக இருந்திருக்கலாம் என்று கூறினார்.