இஸ்ரோ -நாசா கூட்டு முயற்சி; ஜூலையில் விண்ணில் பாயும் நிசார்
இஸ்ரோ -நாசா கூட்டு முயற்சி; ஜூலையில் விண்ணில் பாயும் நிசார்
ADDED : ஜூன் 18, 2025 09:28 AM

ஸ்ரீஹரிகோட்டா; நிசார் செயற்கைக்கோள் ஜூலையில் விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ கூறி உள்ளது.
நாசாவும், இஸ்ரோவும் இணைந்து பூமியின் மேற்பரப்புகளை கண்காணிப்பதற்காக நிசார் என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளன. இது ஒரு அதி நவீன செயற்கைக்கோள் ஆகும்.
2,800 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 3 ஆண்டுகள். இதனை தயாரிக்க ரூ. 1805 கோடி செலவிடப்பட்டு உள்ளது. பவ்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின்னர், கடந்த மாதம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் விண்வெளியில் ஏவும் தேதி தள்ளிக் கொண்டே போனது.
இந்நிலையில், நிசார் செயற்கைக்கோள் ஜூலையில் விண்ணில் ஏவ திட்டமிட்டு உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஜிஎஸ்எல்வி மார்க் 2 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு, பூமியில் இருந்து 747 கி.மீ., சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, 2015ம் ஆண்டு இந்தியா வந்தபோது இந்த திட்டத்தை இணைந்து செயல்படுத்த ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.