ADDED : நவ 19, 2026 11:11 PM
நான் ரெடி; நீங்க ரெடியா?
உ.பி., சட்டசபை தேர்தலில், அயோத்தியில் நான் போட்டியிட வேண்டும் என, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். முதலில் அவர் வேட்புமனு தாக்கல் செய்யட்டும். நானும் தாக்கல் செய்கிறேன். இருவரும் மோதி பார்ப்போம். பலவீனமானவர்கள் நேருக்கு நேர் மோத மாட்டார்கள். பின்னால் இருந்து தாக்குவர்.
- யோகி ஆதித்யநாத்
உ.பி., முதல்வர், பா.ஜ.,
பிரியாணி இங்கு வேகாது!
உத்தர பிரதேசத்தில் ஹைதராபாத் பிரியாணியை மக்கள் விரும்புவதில்லை; புலாவ், மட்டன் பிரியாணியைத் தான் விரும்புகின்றனர். எனவே, ஹைதராபாதைச் சேர்ந்த அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சிக்கு உத்தர பிரதேசத்தில் இடமில்லை. சட்டசபை தேர்தலில் அவரது கட்சி, ‘டிபாசிட்’ இழக்க அதிக வாய்ப்புள்ளது.
- ஆசம் கான்
மூத்த தலைவர், சமாஜ்வாதி கட்சி
உண்மையை சொன்னார்!
இந்தியா உட்பட உலகளவில் நடக்கும் இளைய தலைமுறை போராட்டங்களை பிரித்து பார்க்கக் கூடாது என, அமெரிக்காவில் காங்., – எம்.பி., ராகுல் பேசினார். நாட்டில் இருந்து சொன்னாலும், வெளிநாட்டில் இருந்து சொன்னாலும் உண்மை, உண்மை தான். இளம் தலைமுறையினர் மத்திய பா.ஜ., அரசுக்கு எதிராக உள்ளனர்.
- அகிலேஷ் சிங்
ராஜ்யசபா எம்.பி., – காங்.,
