UPDATED : அக் 12, 2026 10:30 PM
ADDED : அக் 12, 2026 09:14 PM

சட்டவிரோத ஆயுதம்!
பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகள், அத்தகைய சட்டவிரோத ஆயுதம் இறுதியில் தங்கள் சொந்த மக்களுக்கே தீங்கு விளைவிக்கும் என்பதை உணர வேண்டும். சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதன் நீண்டகால விளைவுகளை அந்நாடுகளின் அரசியல் தலைமை உணர்ந்து கொள்ள வேண்டும்.
- சி.பி.ராதாகிருஷ்ணன்
துணை ஜனாதிபதி
அனுமதிக்க மாட்டோம்!
அரசியலமைப்பின் மதிப்புகளை சிதைத்த வரலாறு காங்கிரசுக்கு உண்டு. 1975ல், அன்றைய பிரதமர் இந்திரா சட்ட திருத்தத்தை மேற்கொண்டு, அரசியலமைப்பு சட்டங்களை சிதைக்க முயன்றார். தற்போது, அவரது பேரன் காங்., – எம்.பி., ராகுல் அதை செய்கிறார். அரசியலமைப்பு சட்டத்துக்கு தீங்கு ஏற்பட அனுமதிக்க மாட்டோம்.
- தேவேந்திர பட்னவிஸ்
மஹா., முதல்வர், பா.ஜ.,
களப்பணி அவசியம்!
ஜனநாயகத்தில் கருத்து சுதந்திரம், மாற்றுக்கருத்து, அராஜகம் ஆகியவற்றுக்கு இடையே வித்தியாசம் உள்ளது. இதை ராகுலும், ஒட்டுமொத்த எதிர்க்கட்சியனிரும் புரிந்து கொள்ள வேண்டும். தேர்தலில் வெற்றி பெற தேர்தல் கமிஷனை விமர்சிப்பது மட்டும் போதாது. நீங்கள் மக்களிடம் சென்று களப்பணியாற்ற வேண்டும்.
- ராஜிவ் ரஞ்சன் பிரசாத்
தேசிய செய்தி தொடர்பாளர்
ஐக்கிய ஜனதா தளம்
