ADDED : அக் 23, 2026 08:46 PM

விளக்க வேண்டும்!
அருணாச்சலில் இந்திய – சீன படையினர் இடையே மோதல் நீடிப்பதை இந்தோ – திபெத் போலீஸ் படை இயக்குநர் உறுதி செய்துள்ளார். ஆனால், சீனாவுக்கு மத்திய அரசு தொடர்ந்து நற்சான்றிதழ் வழங்கி வருகிறது. அந்த நாட்டுனான எல்லைப் பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை தொடர்பாக பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும்.
- மல்லிகார்ஜுன கார்கே
தேசிய தலைவர், காங்.,
மோசமான நிலை!
காங்., – எம்.பி., ராகுல் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தாலும், அவரை மீண்டும் மீண்டும் முன்னிறுத்த அக்கட்சி முயற்சிக்கிறது. இதற்காக, நாட்டின் ஒட்டுமொத்த கட்டமைப்பு, கலாசாரம், மரபுகள் மற்றும் நம்பிக்கையை காங்., சிதைக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக, ராகுல் தலைமையில் காங்., மோசமான நிலையையே சந்தித்து வருகிறது.
- சுதான்ஷு திரிவேதி
ராஜ்யசபா எம்.பி., – பா.ஜ.,
பழிவாங்கும் செயல்!
டில்லி விமான நிலையத்தில், என்னை வேண்டுமென்றே திட்டமிட்டு மூன்று மணி நேரத்துக்கு மேலாக சுங்கத் துறை அதிகாரிகள் காக்க வைத்தனர். எனது உடைமைகளை சோதனையிடுவதாக கூறியே தடுத்து நிறுத்தினர். ஆனால், ஆட்சேபனைக்குரிய பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இது, அரசியல் பழிவாங்கும் செயல்.
- பகவந்த் மான்
பஞ்சாப் முதல்வர்
ஆம் ஆத்மி கட்சி
