UPDATED : ஆக 22, 2026 09:12 PM
ADDED : ஆக 22, 2026 08:11 PM

மாணவர்கள் போராட்ட விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் புகைப்பட விளம்பரத்திற்காகவே செயல்பட்டு வருகிறார். ஜார்க்கண்டில், அவரது கட்சியின் ஆதரவுடன் ஆட்சி நடக்கிறது. அங்கும் பல நாட்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டில்லி மாணவர்களை ஆதரிக்கும் ராகுல், அங்கு செல்லாமல் இருப்பது ஏன்? திலீப் கோஷ் மேற்கு வங்க அமைச்சர் பா.ஜ.,
பாரபட்சமாக அனுமதி!
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் அமெரிக்க பயணத்துக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்த விவகாரத்தில் பாரபட்ச முறையில், சிலருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. முதலீட்டை ஈர்க்க மேற்கொள்ளப்படும் இத்தகைய வெளிநாட்டு பயணத்தை தடுப்பது கூட்டாட்சி தத்துவத்தை பலவீனப்படுத்தும். மல்லிகார்ஜுன கார்கே தேசிய தலைவர், காங்.,
பதிலளிக்க வேண்டும்!
அமெரிக்க பயணத்தின் போது, நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானியை சந்திக்கவிருந்தது குறித்து ரேவந்த் ரெட்டி பதிலளிக்க வேண்டும். அவரின் அமெரிக்க பயணம் வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கு அல்ல; மாறாக, அங்குள்ள இந்தியாவுக்கு எதிரான கருத்துகள் கொண்டவர்களை சந்திப்பதற்கான ஏற்பாடாகவே அது இருந்தது. ராம்சந்தர் ராவ் பா.ஜ., தலைவர் தெலுங்கானா
