
பாவத்திற்கு பரிகாரம்!
திருப்பதி கோவில் லட்டு தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப் பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டி, கோவிலின் புனிதத்தைக் கெடுத்துவிட்டார். அவர் செய்தப் பாவத்தைப் போக்க ஒய்.எஸ்.ஆர்., காங்., சார்பில் மாநிலம் முழுதும் உள்ள கோவில்களில் வரும் ௨8ல் பூஜை நடத்தப்படும்.
ஜெகன்மோகன் ரெட்டி
தலைவர், ஒய்.எஸ்.ஆர்.காங்.,
இதுதான் வழக்கம்!
ஆட்சி அமைந்து 100 நாட்கள் கடந்த பின்னும் பார்லி நிலைக்குழுக்கள் அமைக்கப்படவில்லை என திரிணமுல் காங்., குற்றஞ்சாட்டியுள்ளது. 2004ல் இருந்து செப்., இறுதியில் பார்லி., நிலைக்குழு அமைக்கப்படுவது தான் வழக்கம். நிலைக்குழு வேட்பாளர்களை திரிணமுல் காங்., இன்னும் பரிந்துரைக்கவில்லை.
கிரண் ரிஜிஜு
மத்திய அமைச்சர், பா.ஜ.,
சான்று தேவையில்லை!
ஜம்மு - காஷ்மீர் தேர்தலை பார்வையிட வெளிநாட்டு அரசு பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளனர். எதற்காக அவர்கள் நம் தேர்தலை கண்காணிக்க வேண்டும். வெளிநாட்டு அரசுகள் இந்தியா குறித்து கருத்து தெரிவித்தால், இது உள்நாட்டு விவகாரம் என்று சொல்லும் மத்திய அரசு, இதை ஏன் அனுமதிக்கிறது.
ஒமர் அப்துல்லா
தலைவர், தேசிய மாநாட்டு கட்சி

