
ஏ.ஐ.,யில் நாம் எங்கே?
ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவில் அமெரிக்காவின் சாட்ஜிபிடி, சீனாவின் டீப்சீக் ஆகிய தயாரிப்புகள் புதிய தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்துகின்றன. இதில், நம் நாடு எங்கே உள்ளது. ஏ.ஐ., துறையில் எதிர்கால நோக்கில் அரசிடம் என்ன திட்டம் உள்ளது என்பதை தெரியப்படுத்த வேண்டும்.
கபில் சிபல்
ராஜ்யசபா எம்.பி., - சுயேச்சை
இறந்தது எத்தனை பேர்?
உ.பி.,யில் இரட்டை இன்ஜின் அரசு நடப்பதாக கூறுவோர், மஹா கும்பமேளாவில் போக்குவரத்தை கூட சீர்செய்ய முடியாத அரசை நடத்து கின்றனர். கூட்டத்தை நிர்வகிக்க ஏராளமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இருப்பதாக விளம்பரம் தந்தனர். ஆனால், கும்பமேளாவில் இறந்தவர்களின் சரியான எண்ணிக்கையை கூட சொல்ல முடியவில்லை.
அகிலேஷ் யாதவ்
தலைவர், சமாஜ்வாதி
அமெரிக்காவிடம் கூறுங்கள்!
அமெரிக்காவில் சட்டவிரோதமாக இருந்த இந்தியர்கள் கை, கால்களில் விலங்கிடப்பட்டு நாடு கடத்தப்பட்ட விதம் இங்கு கவலையையும், வெறுப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. இது மீண்டும் நிகழக் கூடாது. இந்த செய்தியை அமெரிக்க அரசிடம் முறையாக தெரிவிக்க வேண்டும்.
சசி தரூர்
லோக்சபா எம்.பி.,
- காங்கிரஸ்

