
புல்டோசர் நடவடிக்கை தவறு!
வழக்கில் சிக்குபவர்களின் வீடுகளை புல்டோசர் வைத்து இடித்துத் தள்ளும் போக்கு கவலைக்குரியது. இதை சட்டத்தின் ஆட்சி என்று கூற முடியாது. இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டிருக்க வேண்டும். அதை செய்யாததால், உச்ச நீதிமன்றம் தலையிட்டு மத்திய அரசின் பொறுப்பை நிறைவேற்றியுள்ளது.
மாயாவதி
தலைவர், பகுஜன் சமாஜ்
திட்டம் ஏதுமில்லை!
மோடி அரசின் 100 நாட்கள் நாட்டுக்கு கடினமானதாக இருந்தது. இந்த அரசுக்கு என்ன நோக்கம் இருக்கிறது என்பதே தெரியவில்லை. பழைய பல்லவியையே பாடுகின்றனர். விளம்பர அரசியல் செய்கின்றனர். மோசடி கூட்டணி அரசால் நாட்டு மக்கள் சோர்வடைந்துள்ளனர்.
மல்லிகார்ஜுன கார்கே
தலைவர், காங்கிரஸ்
ஆதிஷி ஒரு கைப்பாவை!
முதல்வரை மாற்றினால் ஆம் ஆத்மியின் குணம் மாறிவிடுமா? காங்கிரசே ஆம் ஆத்மியினரை ஊழல்வாதிகள் என்கின்றனர். சிறையில் இருந்த போது முதல்வர் பதவியை விட்டுத்தராத கெஜ்ரிவால், தற்போது ஆதிஷியை தன் கைப்பாவை ஆக்கியுள்ளார். ஆதிஷியின் துறைகளே செயல்பாடற்று உள்ளன.
ஷெஷாத் பூனவல்லா
செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,

