
பேக் இன் இந்தியா!
பிரதமர் நரேந்திர மோடியால், 10 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட, 'மேக் இன் இந்தியா' திட்டம் தற்போது, 'பேக் இன் இந்தியா'வாக மாறி உள்ளது. பா.ஜ., ஆட்சியில் பொருளாதாரக் கொள்கை நிலையாகவும், விவேகமானதாகவும் இல்லை. அனைத்திலும் பா.ஜ., அரசு பொய் கூறியுள்ளது.
ஜெய்ராம் ரமேஷ்
பொதுச்செயலர், காங்.,
நில அபகரிப்பில் காங்.!
காங்கிரசில் முதல்வர், துணை முதல்வர், கட்சியின் தேசிய தலைவர் என அனைவரும் நில அபகரிப்பில் ஈடுபடுகின்றனர். நீதிமன்ற நடவடிக்கைகளை தவிர்ப்பதற்காக, நிலத்தை திருப்பி தருவதாக, மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடகா முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளனர்.
சுதன்ஷு திரிவேதி
தேசிய செய்தித் தொடர்பாளர்,
பா.ஜ.,
பா.ஜ., தான் காரணம்!
குஜராத்தில் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களை ஆளும் பா.ஜ., அரசு அனுமதிக்கிறது. 30 ஆண்டு களாக மாநிலத்தை அக்கட்சி ஆட்சி செய்கிறது. பா.ஜ., ஆட்சியில், போதைப் பொருளின் நுழைவாயிலாக குஜராத் மாறி விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மும்தாஜ் படேல்
காங்கிரஸ் தலைவர்

