
பிரச்னைகளை தீர்ப்போம்!
மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் வென்று ஆட்சி அதிகாரத்தை, 'மஹா விகாஸ் அகாடி' கூட்டணி கைப்பற்றும். பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் பிரச்னை போன்றவற்றை தீர்க்க எங்கள் கூட்டணி பாடுபடும்.
சரத் பவார்
தலைவர், தேசியவாத காங்.,
சரத் சந்திர பவார்
அரசியல் சதி!
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் ஊழல், முறைகேடு, நிர்வாகத் திறமையின்மை போன்றவற்றை நாங்கள் அம்பலப்படுத்தி வருகிறோம். இதனால் எங்கள் கட்சி நிர்வாகிகள் மீது காங்., அரசு பொய் வழக்கு போடுகிறது. எனக்கு எதிராக அரசியல் சதி நடக்கிறது.
ராமாராவ்
செயல் தலைவர்,
பாரத் ராஷ்ட்ர சமிதி
ஊடுருவலுக்கு ஊக்கம் தருவதா?
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில், பா.ஜ., நிச்சயம் வெற்றி பெறும். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்., கூட்டணி அரசுக்கு தெரிந்தே, மாநிலத்தில் ஊடுருவல்காரர்கள் நுழைந்துள்ளனர். ஜார்க்கண்டிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும்.
ஹிமந்த பிஸ்வ சர்மா
அசாம் முதல்வர், பா.ஜ.,