
தேசத்தின் உயிர்நாடி!
நம் முன்னோர்களால் மிகவும் சிரமப்பட்டு, கவனமாக உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம், நம் தேசத்தின் உயிர்நாடி. அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு சிந்தனையையும் பாதுகாக்க, நாம் ஒன்றுபட வேண்டும்.
மல்லிகார்ஜுன கார்கே
தலைவர், காங்கிரஸ்
வேடிக்கையாக உள்ளது!
உத்தர பிரதேசத்தின் சம்பலில், பொது மக்களின் உயிரை மாநில பா.ஜ., அரசு பறித்துள்ளது. இந்த துக்க நேரத்தில், அரசியலமைப்பு சட்ட தினத்தை அரசு எப்படி கொண்டாடுகிறது? அரசியலமைப்பில் உள்ளதை பின்பற்றாத அரசு, இந்த தினத்தை கொண்டாடுவது வேடிக்கையாக உள்ளது.
அகிலேஷ் யாதவ்
தலைவர், சமாஜ்வாதி
பா.ஜ.,வின் அடிமைகள்!
மஹாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் குறித்து, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா தான் முடிவு செய்வர். ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவாரால் எந்தவொரு முடிவும் எடுக்க முடியாது. பா.ஜ.,வின் அடிமையாக உள்ள அவர்கள், தன்னிச்சையாக செயல்பட முடியாது.
சஞ்சய் ராவத்
ராஜ்யசபா எம்.பி., - உத்தவ் சிவசேனா அணி

