ADDED : நவ 12, 2026 10:03 PM

பதிலளிக்க வேண்டும்!
பெட்ரோலில், எத்தனால் கலக்கும் விவகாரம் உட்பட அனைத்து நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசு மக்களுக்குப் பொறுப்புக்கூற கடமைப்பட்டுள்ளது. மக்கள், எரிபொருளுக்காக கூடுதல் கட்டணம் செலுத்தும் நிலையில், அதில் எத்தனால் கலக்கப்படுகிறது. இதுபற்றி கேள்வி கேட்கும் மக்களை அரசு முடக்குகிறது; இது ஜனநாயகம் அல்ல.
- பிரியங்கா
லோக்சபா எம்.பி., காங்கிரஸ்
பேச்சு நடத்துங்கள்!
துப்பாக்கிக் குண்டுகளோ, ராணுவ மோதல்களோ அரசியல் சிக்கல்களுக்குத் தீர்வு காண உதவாது. பகைமை முடிவுக்கு வரும் வரை காத்திருக்காமல், பாகிஸ்தானுடன் பேச்சை தொடங்க வேண்டும். பாக்., பயங்கரவாதத்தை கைவிட்டு, நம் நாட்டுடன் பேச்சு நடத்துவதற்கான ஏதுவான சூழலை உருவாக்க வேண்டும்.
- பரூக் அப்துல்லா
தலைவர், தேசிய மாநாட்டு கட்சி
எதற்கும் உதவாது!
காங்கிரஸ் மூத்தத் தலைவர் சோனியா எழுதிய புத்தகம், அரசியலமைப்புக்கு முரணானது; அவசரநிலை காலத்தின் போது நடந்தவற்றை, நியாயப்படுத்துகிறது. அடிப்படை அறநெறிகளுக்கும், அரசியல் விழுமியங்களுக்கும் எதிரானது. நம் நாட்டின் அரசியல் சூழலைப் புரிந்துகொள்ள விரும்பும் எவருக்கும் இது எந்த வகையிலும் உதவாது.
- கும்மனம் ராஜசேகரன்
பா.ஜ., மூத்த தலைவர்
