UPDATED : நவ 12, 2026 09:55 PM
ADDED : நவ 12, 2026 09:55 PM
அ நிறம் | அளவு
வில்லியனுார்: வில்லியனுார் அடுத்த பத்துக்கண்ணு, சிவசக்தி நகரை சேர்ந்த தனசேகரன், 44. இவர், கதிர்காமம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுகன்யா, 32; தொண்டமானத்தத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார்.
சில தினங்களாக சுகன்யாவுக்கு மாதவிடாய் பிரச்னையால் தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டு அவதியடைந்து வந்தார். கணவர் வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த சுகன்யா மனமுடைந்து துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
புகாரின்பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
