தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/தேசியம் பேட்டி: உரிமை இல்லை!

தேசியம் பேட்டி: உரிமை இல்லை!

தேசியம் பேட்டி: உரிமை இல்லை!


UPDATED : நவ 15, 2026 07:17 PM

ADDED : நவ 15, 2026 06:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2026 07:17 PM ADDED : நவ 15, 2026 06:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உரிமை இல்லை!


காங்., தலைவர்கள், தங்கள் சுயநலத்திற்காக, 1975ல் அவசரநிலையை அமல்படுத்தி ஜனநாயகத்தைக் கொன்று, அரசியலமைப்பு சட்டத்தை சிதைத்தனர். அரசியலமைப்பு சட்டம் பற்றி பேச அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. பா.ஜ., மீது அவதுாறு கருத்துகளை கூறி, மக்களை திசைத்திருப்ப முயற்சித்தாலும், அவர்களின் பேச்சை யாரும் நம்பமாட்டர்.
- விஷ்ணு தியோ சாய்
சத்தீஸ்கர் முதல்வர், பா.ஜ.,



ஜனநாயகத்தின் ஆன்மா!


வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் நோக்கில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. துாய்மையான வாக்காளர் பட்டியலே, ஜனநாயகத்தின் ஆன்மா. ஆனால், இந்தச் செயல்பாட்டை வைத்து, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குழப்பத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர்.
- சிவ்ராஜ் சிங் சவுகான்
மத்திய அமைச்சர், பா.ஜ.,



விளக்கம் தேவை!


தெலுங்கானாவின் ஹைதராபாதில் நடந்த பாரத் உச்சி மாநாட்டில், மத்திய அரசை, அங்கு ஆளும் காங்., அரசு கடுமையாக விமர்சித்தது. இவ்வாறு இருந்தால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எப்படி முதலீடு செய்வர்? காங்., கட்சி நடத்திய இந்த நிகழ்ச்சிக்காக, தெலுங்கானா அரசு பொது நிதியை எவ்வாறு செலவிட முடியும்? இதை மாநில அரசு விளக்க வேண்டும்.
- கிஷண் ரெட்டி
மத்திய அமைச்சர், பா.ஜ.,



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us