ADDED : நவ 28, 2026 08:44 PM
உறுதியாக உள்ளோம்!
நம் நாட்டின் பெண்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்கள் துணிச்சலை யாராலும் அசைக்க முடியாது. மகளிர் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக உள்ள அனைத்துத் தடைகளையும் நாங்கள் தகர்த்து எறிவோம். பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிப்பதை எதிர்க்கும் கட்சிகளால் ஒருபோதும் அதைத் தடுக்க முடியாது.
- நரேந்திர மோடி
பிரதமர்
அனைவருக்கும் பயன்!
கடந்த 2023ல் அனைவரும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரித்த நிலையில், இப்போது தொகுதி மறுசீரமைப்பை ஏன் எதிர்க்க வேண்டும்? லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிப்பது, அனைவருக்கும் பயனளிக்கும்; இது எப்படி பா.ஜ.,வுக்கு மட்டும் சாதகமாகும்? யார் வெல்ல வேண்டும் என்பதை வாக்காளர்களே தீர்மானிப்பர்.
- ராம்தாஸ் அத்வாலே
மத்திய அமைச்சர், இந்திய குடியரசு கட்சி
வீழ்ச்சிக்கான தொடக்கம்!
தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை, தேசியவாத காங்., கட்சி ஆதரிக்க முடிவு செய்தது, மஹாராஷ்டிராவுக்கு செய்யும் துரோகம். அதிகாரத்திற்காக சிலர், தங்கள் சுயமரியாதையை அடகு வைத்து பா.ஜ.,வுடன் கைகோர்க்க விரும்பினால், நம் மாநிலம் தன் உண்மையான அடையாளத்தை இழக்கும். இது, மாநில வீழ்ச்சிக்கான தொடக்கமாக அமையும்.
- சஞ்சய் ராவத்
ராஜ்யசபா எம்.பி., உத்தவ் சிவசேனா கட்சி
