ADDED : நவ 29, 2026 09:48 PM

பா.ஜ.,வுக்கு சாதகம்!
மத்திய அரசு முன்மொழிந்துள்ள தொகுதி மறுவரையறை மசோதா, ஒட்டுமொத்த வரைப்படத்தையும் மாற்றியமைக்கும் முயற்சி. இது, பா.ஜ.,வுக்கு சாதகமாகவும், எதிர்க்கட்சிகளுக்கு பாதகமாகவும் அமையும். தமிழகத்தில், லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை உயர்ந்தால், தொகுதி எல்லைகளின் வரைபடத்தையே முழுதுயாக மாற்றியமைக்கும்.
- சிதம்பரம்
ராஜ்யசபா எம்.பி., காங்கிரஸ்
தடுக்க முடியாது!
கடந்த 2023ல் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை, காங்., தலைமையிலான ‘இண்டி’ கூட்டணி ஏன் எதிர்க்கவில்லை? தொகுதி மறுவரை மசோதாவை எதிப்பவர்கள், அனைவரும் பொய்யர்கள். இவர்கள் எதிர்ப்பால், மகளிருக்கான இட ஒதுக்கீட்டை தடுக்க முடியாது. பிரதமர் மோடி முடிவு செய்துவிட்டால், அது நடந்தே தீரும்; அதை உறுதி செய்வார்.
- தேவேந்திர பட்னவிஸ்
மஹாராஷ்டிரா முதல்வர், பா.ஜ.,
முழு ஆதரவு!
தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு ஆகிய இரு மசோதாக்களுக்கும் எங்கள் கட்சி முழு ஆதரவு அளிக்கும். பார்லிமென்டில் உள்ள இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம், தற்போது உள்ள பார்லி., உறுப்பினர்களின் இடங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த இட ஒதுக்கீட்டை செயல்படுத்த முடியும்.
- சிராக் பஸ்வான்
மத்திய அமைச்சர், லோக் ஜனசக்தி கட்சி
