தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/தேசியம் பேட்டி: போராட்டங்கள் மூலம் கைப்பற்ற முயற்சி!

தேசியம் பேட்டி: போராட்டங்கள் மூலம் கைப்பற்ற முயற்சி!

தேசியம் பேட்டி: போராட்டங்கள் மூலம் கைப்பற்ற முயற்சி!


UPDATED : அக் 13, 2026 08:46 PM

ADDED : அக் 13, 2026 08:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 08:46 PM ADDED : அக் 13, 2026 08:28 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கைப்பற்ற முயற்சி!


தேர்தல்களில், பா.ஜ.,வை தோற்கடிக்க முடியாத காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், போராட்டங்கள் மூலம் ஜனநாயக அமைப்புகளை கைப்பற்ற முயல்கின்றன. அத்துடன், டில்லியில் பொது வாழ்வையும் சீர்குலைத்து வருகின்றன. காங்., தன் 65 ஆண்டுகால ஆட்சியில் நாட்டை சுரண்டிய நிலையில், தற்போது, பின்னோக்கி அழைத்து செல்கிறது.
- ரவி கிஷன்
லோக்சபா எம்.பி., – பா.ஜ.,



பாதுகாப்பு இல்லை!


கடந்த 2023ல் மத்திய அரசு இயற்றிய சட்டத்தின் மூலம் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு சட்ட ரீதியான விலக்கு மட்டுமே உள்ளது. ஆனால், அரசியலமைப்பு சட்ட ரீதியாக பாதுகாப்பு இல்லை. எதிர்க்கட்சியினருக்கு, அவர் மீது நம்பிக்கை இல்லாத நிலையில், தார்மீக அடிப்படையில் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்.
- சசி தரூர்
லோக்சபா எம்.பி., காங்கிரஸ்



ராஜினாமா செய்ய வேண்டும்!


கேரள சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்தவருமான பினராயி விஜயனுக்கு, சிறிதளவாவது வெட்கம் இருந்தால், அவர் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தன்னைப் பாதுகாத்துக்கொள்ள, ஆளும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் கீழ் செயல்பட முடியாது.
- ராஜீவ் சந்திரசேகர்
கேரள பா.ஜ., தலைவர்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us