UPDATED : அக் 27, 2026 12:00 AM
ADDED : அக் 26, 2026 08:02 PM

உறுதி செய்யுங்கள்!
மேற்கு வங்கத்தில், நகர்ப்புற நக்சல்கள், பிரிவினையை துாண்டும் கும்பல்கள், கரப்பான் பூச்சி மற்றும் கரையான்கள் இனப்பெருக்கம் செய்யாமல் இருப்பதை மக்கள் உறுதி செய்ய வேண்டும். தேசியம், நாட்டுப்பற்று, வங்கத்தின் வளமான கலாசார பாரம்பரியம் மற்றும் சனாதனி மரபுகளைப் பாதுகாக்க என் அரசு தொடர்ந்து பணியாற்றும்.
- சுவேந்து அதிகாரி
மேற்கு வங்க முதல்வர், பா.ஜ.,
பாதுகாக்கும் அரசு!
ஓட்டுத் திருட்டுக்கு எதிராக எண்ணற்ற புகார்கள் இருந்தாலும், தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரைப் பாதுகாக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு அனைத்து தந்திரங்களையும் கையாளுகிறது. நம் நாட்டின் ஜனநாயகத்தை காக்க, நவ., 1ல் டில்லி ராம்லீலா மைதானத்தில் நடக்கும், ‘டில்லி சலோ’ பேரணியில் மக்கள் பங்கேற்க வேண்டும்.
- மல்லிகார்ஜுன கார்கே
தேசிய தலைவர், காங்கிரஸ்
கண்ணியமற்ற பேச்சு!
பிரதமர் மோடி மற்றும் அவரது குடும்பத்தை கண்ணியமற்ற முறையில் தாக்கிப் பேசுவது, காங்., தலைவர்கள், கையாளும் ஓர் அரசியல் மரபாக மாறிவிட்டது. இது, அக்கட்சிக்குள் நிலவும் விரக்தியையும், நம்பிக்கையற்ற நிலையையும் எடுத்துக்காட்டுகிறது. பிரதமர் மோடிக்கு எதிரான அவமதிப்புகளை நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.
- நிதின் நபின்
தேசிய தலைவர், பா.ஜ.,
