UPDATED : அக் 29, 2026 12:00 AM
ADDED : அக் 28, 2026 09:14 PM

அரசியலாக்காதீர்!
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், ஒவ்வொரு விவகாரத்தையும் அரசியலாக்குவதை தவிர்க்க வேண்டும். நம் தொழில்துறையையும் தொழில்முனைவோரின் வெற்றிகளையும் தொடர்ந்து அவர் குறைக்கூறி வருகிறார். குறுகிய அரசியல் நோக்கத்திற்காக, ஆதாரமற்ற அவதுாறுகளைக் கூறுவதற்குப் பதிலாக, ஆக்கப்பூர்வமான முறையில் செயல்படுவது அவசியம்.
- நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர், பா.ஜ.,
கடும் நடவடிக்கை!
ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சமூக ஊடகங்கள் மூலம் ஒரே எண் கொண்ட போலி லாட்டரிச் சீட்டுகள் பலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. அக்குற்றச்செயலில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய மோசடிகள் அரசுக்கும், மக்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.
- வி.டி.சதீசன்
கேரள முதல்வர், காங்கிரஸ்
ஓய்வெடுங்கள் மம்தா!
மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் திரிணமுல் காங்., கட்சியின் தலைவருமான மம்தா, 75 வயதை கடந்துவிட்ட நிலையில். பவானிபூர் தொகுதியை நான் விட்டுக்கொடுத்திருந்தால், மீண்டும் அங்கு போட்டியிட்டு இருப்பார். அந்த வாய்ப்பை நான் வழங்கவில்லை. தேர்தல் அரசியலில் இருந்து அவர் விலகி, வீட்டிலேயே ஓய்வெடுக்க வேண்டும்.
- சுவேந்து அதிகாரி
மேற்கு வங்க முதல்வர், பா.ஜ.,
