தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டவரின் பெயர்கள் சிறப்பு முகாமில் கண்டுபிடிப்பு

வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டவரின் பெயர்கள் சிறப்பு முகாமில் கண்டுபிடிப்பு

வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டவரின் பெயர்கள் சிறப்பு முகாமில் கண்டுபிடிப்பு


UPDATED : அக் 29, 2026 12:00 AM

ADDED : அக் 28, 2026 09:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2026 12:00 AM ADDED : அக் 28, 2026 09:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: எஸ்.ஐ.ஆர்., நடந்த போது, கர்நாடகாவில் கண்டுபிடிக்கப்பட்ட, 771 வெளிநாட்டு நபர்களில், நேபாளை சேர்ந்தவர்கள் அதிக எ ண்ணிக்கையில் இருப்பது, தெரிய வந்துள்ளது.

கர்நாடகாவின், அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்த தகவலின் படி, எஸ்.ஐ.ஆர்., நடத்திய போது, கர்நாடகாவில் 771 வெளிநாட்டு நபர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களில் 688 பேர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள். மூவர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். ஒருவர் வங்கதேசத்தை சேர்ந்தவர்.

இவர்கள் மட்டுமின்றி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, ரஷ்யா உட்பட, பல்வேறு நாடுகளின் நபர்களின் பெயர்களும், வாக்காளர் பட்டியலில் உள்ளன. வெளிநாட்டு நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டதில், பெங்களூரு வடக்கு முதல் இடத்தில் உள்ளது. இங்கு, 580 வெளி நாட்டினர் கண் டுபிடிக்கப்பட்டனர்.

பெங்களூரில் வாக்காளர் பட்டியல் ஆய்வில், இவ்வளவு எண்ணிக்கையில் வெளிநாட்டு நபர்களின் பெயர்கள் தென்பட்டது, பல கேள்விகளை எழுப்பியள்ளது. இவர்கள் உள்நோக்கத்துடன், வாக்காளர் பட்டியலில் சேர்ந்தார்களா அல்லது ஆவணங்கள் பரிசீலனையில், குளறுபடி நடந்ததா என்பதற்கு, அதிகாரிகள் விளக்கமளிக்கும்படி, பொது மக்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பெங்களூருடன், தட்சிணகன்னடா, உத்தரகன்னடா, உடுப்பி, பெலகாவி, மாண்டியா உட்பட, பல்வேறு மாவட்டங்களிலும், நேபாள நபர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளன. எஸ்.ஐ.ஆர்., துவங்குவதற்கு முன்பே, வெளிநாட்டினரின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டதும் தெரியவந்தது.

இதை பற்றி தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us