
கிடப்பில் போட்டது ஏன்?
தேர்தல் வரும் போது மக்களை பிளவுபடுத்த தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் போன்றவை கொண்டு வரப்படுகின்றன. இவ்வளவு நாள் இந்த சட்டங்களை பா.ஜ., கிடப்பில் போட்டிருந்தது ஏன்?
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
லோக்சபா எம்.பி., ----காங்.,
வாரிசு அரசியலுக்கு ஆபத்து!
பா.ஜ., மூன்றாவது முறை ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகத்துக்கு ஆபத்து என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறிஉள்ளார். ஜனநாயகத்திற்கு ஆபத்து இல்லை. ஜனநாயக போர்வையின் கீழ் உள்ள வாரிசு அரசியல்வாதிகளுக்கு தான் ஆபத்து.
சுதன்ஷு திரிவேதி
ராஜ்யசபா எம்.பி., ----- பா.ஜ.,
மோடி மட்டுமே வெல்வார்!
வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வால் 200 இடங்கள் கூட வெல்ல முடியாது. வரும் தேர்தலில் மோடி வெற்றி பெறுவார். அவர் கட்சி வெற்றி பெறாது என்பது என் கணிப்பு.
சஞ்சய் ராவத்
ராஜ்யசபா எம்.பி.,
சிவசேனா உத்தவ் அணி