
தேர்தல் கமிஷனின் பொறுப்பு!
ஒரே நாடு ஒரே தேர்தல் என மத்திய அரசு தண்டோரா போடுகிறது. ஜம்மு -- காஷ்மீரில் இருந்து அதை துவங்க அருமையான வாய்ப்பு வந்துள்ளது. லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல் இரண்டையும் அறிவித்து, ஜனநாயகத்தை மீட்டெடுப்பது தேர்தல் கமிஷனின் பொறுப்பு.
ஒமர் அப்துல்லா
தலைவர், தேசிய மாநாட்டு கட்சி
மோடி ஆட்சி தொடரும்!
காங்கிரசில் இருப்பவர்கள் பொய்யர்கள், ஏமாற்றுக்காரர்கள், முழக்கங்களை மட்டுமே எழுப்புவர். அவர்களது பொய்கள் எடுபடாது. மோடியின் ஆட்சி தொடரும். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக நம் நாடு மாறும்.
பிரஹலாத் ஜோஷி
மத்திய அமைச்சர், பா.ஜ.,
சிறப்பு விசாரணை குழு!
தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் அமலாக்கத் துறையும், சி.பி.ஐ.,யும் உறக்கத்தில் உள்ளன. எதிர்க்கட்சிகளுக்கு எதிராக ஏதாவது நடந்திருந்தால் களத்தில் இறங்கியிருப்பர். எனவே உச்ச நீதிமன்றமே இதில் சிறப்பு விசாரணை குழுவை அமைக்க வேண்டும்.
கபில் சிபல்
ராஜ்யசபா எம்.பி., -- சுயேச்சை

