ஈரோட்டில் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி
ஈரோட்டில் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி
ADDED : டிச 14, 2025 03:41 PM

ஈரோடு: ஈரோட்டில் வரும் 18 ம் தேதி நடக்க உள்ள தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், கரூர் சம்பவத்துக்கு பின், மக்கள் சந்திப்பு பயணத்தை மீண்டும் துவங்கி உள்ளார். காஞ்சிபுரம், புதுச்சேரியில் பிரசாரம் செய்த அவர், வரும் 18ம் தேதி, ஈரோட்டில் பயணம் மேற்கொண்டு, பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், விஜயமங்கலம் டோல்கேட் அருகே, விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அனுமதி அளிக்குமாறு காவல்துறையிடம் த.வெ.க.,வினர் கேட்டனர்.
இந்நிலையில், விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வாடகை 50 ஆயிரம் ரூபாய், டெபாசிட் 50 ஆயிரம் ரூபாய் விஜய் தரப்பில் செலுத்தப்பட்டதால் இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட எஸ்பி சுஜாதா அனுமதி வழங்கினார்.

