
கண்காணிப்பு வேண்டும்!
பா.ஜ., மக்களை எதிர்கொள்ள அஞ்சு வதால், தேர்தல் கமிஷனை தனது கட்சி அலுவலகமாக மாற்றி உள்ளது. நேர்மையான தேர்தலுக்காக மாநில அரசு அதிகாரிகளை மாற்றுவது போல், இந்த லோக்சபா தேர்தலுக்கு உச்ச நீதிமன்ற கண்காணிப்பு தேவை.
டெரெக் ஓ பிரையன்
ராஜ்யசபா எம்.பி., -
- திரிணமுல் காங்.,
மகிழ்ச்சி அடைகிறேன்!
எனக்கு அடுத்து ஹரியானா முதல்வராக நாயப் சிங் பதவியேற்றது மகிழ்ச்சியை தருகிறது. குடும்ப உறுப்பினர் ஒருவர் முக்கிய பொறுப்புக்கு வரும் போது, அந்த குடும்பத்தில் உள்ள பெரியவர் என்ன மகிழ்ச்சியை அடைவாரோ, அதே மனநிலை தான் எனக்கும்.
மனோகர் லால் கட்டார்
ஹரியானா முன்னாள் முதல்வர்,
பா.ஜ.,
நாற்பதிலும் வெல்வோம்!
பீஹாரில் பா.ஜ., கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கிடையே எந்த கருத்து வேறுபாடுகளும் கிடையாது. எங்கள் கூட்டணி மீது மக்களுக்கு கோபம் கிடையாது. பீஹாரின் 40 தொகுதிகளிலும் பா.ஜ., கூட்டணி வெல்லும்.
ஷாநவாஸ் ஹுசைன்
லோக்சபா எம்.பி., -- பா.ஜ.,

