
ஒலிம்பிக்கிற்கு தயார்!
வரும் 2030ல் இளைஞர்களுக்கான ஒலிம்பிக் மற்றும் 2036ல் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா தயாராக உள்ளது. அதற்கான அனைத்து வித முயற்சிகளையும் நாடு மேற்கொள்ளும். நம் நாட்டின் அளவிற்கு பெரிய விளையாட்டுச் சந்தை உலகில் இல்லை.
அனுராக் தாக்குர்
மத்திய விளையாட்டு துறை அமைச்சர், பா.ஜ.,
லடாக்கிற்கு ஆபத்து!
மோடி அரசு ஒருபுறம் நம் பிராந்திய ஒருமைப்பாட்டையும், தேசிய பாதுகாப்பையும் ஆபத்தில் தள்ளி உள்ளது. மறுபுறம், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த லடாக்கின் இமயமலை பகுதிகளை அதன் பெரு முதலாளி நண்பர்களுக்காக சுரண்ட பார்க்கிறது.
மல்லிகார்ஜுன கார்கே
தலைவர், காங்கிரஸ்
கட்சி சகிக்காது!
தவறான மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் எவரையும் திரிணமுல் காங்கிரஸ் சகித்துக்கொள்ளாது. அது சந்தேஷ்காலி ஷாஜகானாக இருக்கட்டும், சாரதா குழும தலைவர் சுதிப்தோ சென்னாக இருக்கட்டும். அவர்களை மேற்கு வங்க போலீஸ் தான் கைது செய்தது.
அபிஷேக் பானர்ஜி
பொதுச் செயலர், திரிணமுல் காங்.,

