
பாகிஸ்தானில், அமெரிக்கப் படைகளால் சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது போல், அந்நாட்டில் உள்ள பயங்கரவாதிகளின் ஒன்பது முகாம்களை நம் ராணுவத்தினர் தரைமட்டமாக்கி உள்ளனர். நம் துல்லிய தாக்குதலில், பயங்கரவாதிகள் மட்டுமே கொல்லப்பட்டனர்.
ஜக்தீப் தன்கர், துணை ஜனாதிபதி
ஒப்புதல் அளித்தது யார்?
'ஆப்பரேஷன் சிந்துார்' குறித்து பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்ததாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஒப்புக்கொண்டுள்ளார். இது ஒரு குற்றம். இதற்கு ஒப்புதல் அளித்தது யார்? இதனால், நம் விமானப்படை இழந்த விமானங்கள் எத்தனை?
ராகுல், லோக்சபா எதிர்க்கட்சி, தலைவர், காங்.,
இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு!
பஹல்காம் தாக்குதல், ஆப்பரேஷன் சிந்துார் ஆகியவற்றை தொடர்ந்து, நம் நாட்டின் பார்வை, நிலைப்பாட்டை தெளிவுபடுத்த அனைத்து கட்சி பிரதிநிதிகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவது ஒரு நல்ல வாய்ப்பு. பாகிஸ்தானின் தில்லுமுல்லு வேலைகளை அம்பலப்படுத்த வேண்டும்.
ஒமர் அப்துல்லா, ஜம்மு - காஷ்மீர் முதல்வர், தேசிய மாநாட்டு கட்சி