UPDATED : ஆக 08, 2025 09:54 AM
ADDED : ஆக 08, 2025 12:15 AM

என் பெயரில் இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கினால், அது யார் தவறு? அரசு அதிகாரிகளின் சொந்த தவறை மறைக்க என் மீது குற்றம் சாட்டுகின்றனர். ஒரே தொகுதியில் நான் ஓட்டளித்து வருகிறேன். தேர்தல் அதிகாரியின் நோட்டீசுக்கு விரைவில் உரிய பதில் அளிப்பேன்.
தேஜஸ்வி யாதவ் தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்
நாடகமாடுகின்றனர்!
அமெரிக்கா, 50 சதவீத வரி விதித்த பின், விவசாயிகளே முதன்மையானவர்கள் என, பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய நம் விவசாயிகளை, அவர் டில்லிக்குள் நுழைய அனுமதிக்கவே இல்லை. அப்போது இறந்த விவசாயிகள் பற்றி கவலைப்படவில்லை. இப்போது மத்திய அரசு நாடகமாடுகிறது.
உத்தவ் தாக்கரே தலைவர், உத்தவ் சிவசேனா
பாரபட்சமற்ற அமைப்பு!
மேற்கு வங்கத்தில், தகுதி வாய்ந்த வாக்காளர்களின் ஓட்டுரிமையை தேர்தல் கமிஷன் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது; அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுகிறது. தேர்தல் கமிஷன் ஒரு பாரபட்சமற்ற அமைப்பு என்பதை புரிந்துகொண்டு, அரசியலமைப்பின் வரம்பிற்குள் செயல்பட வேண்டும்.
அபிஷேக் பானர்ஜி லோக்சபா எம்.பி., - திரிணமுல் காங்.,