தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/இந்தியா/தகுந்த பதிலடி அளிப்பர்!

தகுந்த பதிலடி அளிப்பர்!

தகுந்த பதிலடி அளிப்பர்!


UPDATED : மே 03, 2026 08:34 PM

ADDED : மே 03, 2026 08:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 03, 2026 08:34 PM ADDED : மே 03, 2026 08:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காங்., உட்பட எதிர்க்கட்சியினர், அரசு முகமைகள், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் கமிஷன் மற்றும் ஊடகங்களை தாக்கின; தற்போது, நீதித்துறையை இலக்காக கொண்டுள்ளன. நம் ஜனநாயகத்தின் அடித்தளத்தையே தாக்கும் இக்கட்சியினருக்கு ஐந்து மாநில தேர்தல் முடிவுகளின் மூலம் மக்கள் தகுந்த பதிலடி அளிப்பர்.

கிரண் ரிஜிஜூ மத்திய அமைச்சர், பா.ஜ.,

விவாதிக்க வேண்டும்!

லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் நிக்கோபர் பயணத்திற்கு பின், மத்திய அரசு நிலைகுலைந்து போய் உள்ளது. இதன் விளைவாக, 'கிரேட்டர் நிக்கோபர்' திட்டம் குறித்து அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எழுப்பிய கேள்விக்கான பதில் இடம்பெறவில்லை. இதுபற்றி பார்லி.,யில் விவாதிக்க வேண்டும்.

ஜெய்ராம் ரமேஷ் பொதுச் செயலர், காங்.,

தேர்தல் விதிமுறை மீறல்!

மேற்கு வங்கத்தில் ஓட்டு எண்ணிக்கை பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள பல அதிகாரிகள், தங்கள் பணி விபரங்களை தங்கள் துறைசார் சங்கங்களிடம் தெரிவிப்பதாக புகார் எழுந்துள்ளது. இது, தேர்தல் விதிமுறை மீறல். இத்தகைய நடைமுறைகள் தீவிர பின்விளைவுகளை ஏற்படுத்தும். சுவேந்து அதிகாரி மே. வங்க சட்டசபை எதிர்க்கட்சி தலைவர், பா.ஜ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us