UPDATED : மே 31, 2026 06:25 PM
ADDED : மே 31, 2026 06:01 PM

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம். இது, நம் மாநில விவசாயத்துறை வளர்ச்சியின் முக்கிய துாணாக மாறியுள்ளது. தடையற்ற மின் வினியோகம் மற்றும் வேளாண் சார்ந்த நலத்திட்ட நடவடிக்கைகள் மூலம் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதில் அரசு உறுதியுடன் உள்ளது. ரேவந்த் ரெட்டி தெலுங்கானா முதல்வர், காங்கிரஸ்
கோபத்தின் வெளிப்பாடு!
திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் அபிஷேக் பானர்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதலை, நாங்கள் கண்டிக்கிறோம். சட்டத்தை தங்கள் கையில் எடுக்கும் உரிமை எவருக்கும் இல்லை. அதேசமயம், இது, முந்தைய ஆட்சியில் இருந்த ஆளுங்கட்சிக்கு எதிராக மக்களிடையே பெருகி வரும் கோபத்தின் வெளிப்பாடாகும். திலிப் கோஷ் மேற்கு வங்க அமைச்சர், பா.ஜ.,
வன்முறை செயல்!
எங்கள் கட்சி பொதுச் செயலர் அபிஷேக் பானர்ஜி மீதான தாக்குதல், மக்களிடையே ஏற்பட்ட கோபத்தின் வெளிப்பாடு அல்ல; இது, பா.ஜ., தொண்டர்களின் திட்டமிட்ட வன்முறை செயல். அக்கட்சியின் சுஷ்மிதா தத்தா உள்ளிட்டோர் அவர் மீது கல் எறிந்தது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. மஹூவா மொய்த்ரா லோக்சபா எம்.பி., திரிணமுல் காங்., கட்சி
