தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி


ADDED : ஆக 14, 2026 08:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2026 08:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாதிப்பு ஏற்பட்டிருக்காது! நம் நாட்டின் பிரிவினைக்கும் அப்போது நடந்த படுகொலைக்கும் காங்கிரசே முழுப் பொறுப்பு. சுதந்திரம் பெற்ற போது, நம் நாட்டின் பிரதமராக மோடி இருந்திருந்தால், யாராலும் நம் நாட்டிற்கு சிறிதளவும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்க முடியாது. அவர்களின் கோழைத்தனத்தால், நம் நாடு பெரும் விலை கொடுக்க வேண்டியிருந்தது. யோகி ஆதித்யநாத் உ.பி., முதல்வர், பா.ஜ.,

வாழ்வாதாரம் பாதிப்பு! சிந்து நதிநீர் ஒப்பந்தத்தால், எங்கள் வாழ்வாதாரம் பறிபோனது. இந்த நீரை, நாங்கள் முறையாக பயன்படுத்தும் வகையில், இதற்கான ஒப்பந்தத்தை, மத்திய அரசு தொடர்ந்து நிறுத்தி வைக்க வேண்டும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கான ஆதரவை, பாக்., நிறுத்தும்வரை இந்த நடவடிக்கை அமலில் இருக்க வேண்டும். ஒமர் அப்துல்லா ஜம்மு – காஷ்மீர் முதல்வர், தேசிய மாநாட்டு கட்சி

தடை விதிக்கக்கூடாது! வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதாவின் கீழ் முன்மொழியப்பட்ட மாற்றங்களால், கல்வி மற்றும் சுகாதார அமைப்புகளுக்கான வெளிநாட்டு நன்கொடைகளுக்கு தடை விதிக்கக்கூடாது. இச்சட்டத்தை அரசு, அவசரமாக நிறைவேற்றக் கூடாது; அனைத்து கட்சியினரையும் ஆலோசிக்க வேண்டும். சுப்ரியா சுலே லோக்சபா எம்.பி., தேசியவாத காங., சரத்பவார் பிரிவு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us