ADDED : ஆக 15, 2026 07:52 PM
நல்லிணக்கம் ஏற்படும்! நம் அரசியலமைப்பின் அடிப்படை நோக்கத்திற்கு ஏற்ப, மத்திய பிரதேசத்தில் பொது சிவில் சட்டம் விரைவில் அமல்படுத்த உள்ளோம். அனைவருக்கும் ஒரே சட்டத்தை கொண்டு வருவதன் மூலம், சமூக நல்லிணக்கம் ஊக்குவிக்கப்படும். இந்தச் சட்டம் பெண்களை, கொடுமைகள் மற்றும் அநீதிகளில் இருந்து விடுவிக்கும். மோகன் யாதவ் ம.பி., முதல்வர், பா.ஜ.,
சீர்திருத்தங்கள் தேவை! இளைஞர்கள், தங்கள் கனவுகளை நனவாக்க இரவு பகலாக உழைக்கின்றனர். அவர்களின் கடின உழைப்பை, வினாத்தாள் கசிவு கும்பலிடம் பலியாக விடமாட்டோம். அவர்களின் திறமைக்கு, நீதி கிடைப்பதை உறுதி செய்வோம். எதிர்காலத்தில் தேர்வு முறைகேடுகளைத் தடுக்க, அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் தேவை. ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதல்வர், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி
அசாதாரணமானவர் மோடி! பிரதமர் மோடி, வாக்குறுதிகளை அள்ளி வீசுவதில், அசாதாரணமானவர். கடந்த ஆண்டுகளில், அவர் அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அவற்றின் நிலை குறித்து பிரதமர் மோடி தெளிவுப்படுத்த வேண்டும். அவற்றை காக்க தவறிய மத்திய அரசை அகற்றுவது, நம் நாட்டிற்கான சுதந்திரத்தை அர்த்தமுள்ளதாக்கும். எம்.ஏ. பேபி பொதுச் செயலர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
